Thursday, August 28, 2008
Friday, August 22, 2008
எனது ஒரு அபிப்பிராயம் நீங்கள் எப்படி?
நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களாக எமது தமிழ் சமூகத்தில் இருக்கிறோம். இந்துக்களாக கிறிஸ்தவர்களாக எத்தனைபேர் மத வேறுபாட்டுடன் இருக்கிறோம் சண்டைகள் பிடிக்கிறோம் ஏன் இன்று இந்துக்களில் கூட சிவன் விஸ்னு என்று மீண்டும் வேற்றுமை சண்டை என்று கிறிஸ்து காலத்துக்கு முன்னர் இருந்ததுபோல துவங்கியிருக்கிறது. எமக்கு தெரியாத பழைய வரலாறுகளை கண்கண்ட சாட்சியில்லாத வரலாறுகளை தூக்கி வைத்து உன்ர மதக்காரன் அப்பிடி செய்தான் என்ர மதக்காரர் இப்படி செய்தார்கள் என்று வாக்குவாதப்ப்டுகிறோம். எமக்கு எப்படி தெரியும் எது சரி எது பிழை என்று ஏதோ எமது முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை வைத்துக்கொண்டு அல்லது நாம் சின்னவயதில் பாடப்புத்தகத்தில் கதைகளில் படித்ததை வைத்துக்கொண்டு வாதாடுகிறோம். எமது முன்னோர்கள் என்பவர்கள் யார் அல்லது எமது பாடபுத்தக எழுத்தாளர்கள் யார் எல்லோரும் எமைச்சார்ந்தவர்களே. இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது எம்மைபோலத்தானே மறுசாரரும் அவர்களின் முன்னோர் சொன்னகருத்தை வைத்து வாதாடுகிறார்கள் அவர்களை எப்படி பிழை சொல்லமுடியும். எம்மால் இவற்றை ஆராய்ந்துபார்க்கத்தான் முடியுமா அல்லது அதற்குதான் நேரமிருக்கிறதா அப்பிடித்தான் நேரம் ஒதுக்கி இதைத்தான் ஆராய்ந்தாலும் எமக்கு என்ன பிரயோசனம். நீங்கள் கேட்கலாம் இப்படி பிரயோசனமில்லையென்று விட்டுவிட்டால் எமது முன்னோர்கள் செய்த தியாகங்களை மறந்தவர்களாக புறக்கணித்தவர்களாக ஆகிவிடுவோமே என்று, உண்மைதான் எமது மதங்களில் உள்ள கடவுள்கள் சிவன், விஸ்னு, இராமர், சக்தி, யேசு எமக்காக போராடிய போர்வீரர்களாகவோ அல்லது தியாகிகளாகவோ தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எமது முன்னோர்கள் இதனை சரியான முறையில் ஒற்றுமையுடன் எமது சந்ததிக்கு கொண்டுவரவில்லையே முரண்பாட்டுடந்தானே கொண்டுவந்தார்கள். இதில் யார் துரோகிகள் யார் நல்லவர்கள் என்று எமக்கு சொல்லத்தெரியாது.
இன்றுகூட பாருங்கள் எத்தனை துரோகிகள் எம்முன் இருக்கிறார்கள் அவர்கள் தாங்கள் ஏதோ நல்லவர்கள் போல எத்தனை கதைவிடுகிறார்கள் தங்கள் நிலைப்பாடு சரியென்பதுபோல சூட்சுமமாக கருத்தை விதைக்கிறார்கள். இந்த கருத்துக்களுக்கு எத்தனைபேர் எடுபட்டுபோறார்கள். ஆனால் இவை எம் கண்முன் நடப்பதால் எம்மால் எது சரி பிழை என்று அனுமானிக்கமுடிகிறது. இதனை இந்த சரியானவர்களை பற்றி நாம் ஒற்றுமையாக அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லாவிட்டால் அவர்கள் பிழையானவர்களை சரியென்று கருதி துதித்தாலும் துதிப்பார்கள்.
ஆகவே நான் சொல்லவரும் கருத்தென்னவென்றால், எமக்காக உயிர் தந்த மாவீரர்களை எமக்குரிய தெய்வங்களாக எல்லோரும் பொதுவாக ஒற்றுமையாக ஏற்றுக்கொண்டால் என்ன? அதற்காக உங்கள் கோயில்களில் உள்ள சிலைகளை எடுத்துவிட்டு மாவீரர் படங்களை வைக்க சொல்லி நான் சொல்லவில்லை. முதலில் உங்கள் மனதில் மாவீரர்களை தெய்வங்களாக நிறுத்துங்கள் உங்கள் கோயில்களில் உள்ள சிலைகள் ஊடாக அந்த உண்மை தியாகிகளை பாருங்கள். இதனை உங்கள் பிள்ளைகளின் மனதிலும் விதையுங்கள். அது தானாகவே அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லப்படும். பழைய கல்லில கட்டி கடலில் போட்ட கதையை பிள்ளைகளுக்கு சொல்லாமல் உங்கள் கண்முன் உங்கள் கண்ணே சாட்சியாக உள்ள உண்மை மாவீரர்களின் மகிமையை சொல்லிக்கொடுங்கள். உங்கள் உங்கள் கோயில்களில் வரும் விஷேடங்களின் போது எப்படி அனுஷ்டிப்பிங்களோ (சிலர் விரதம் இருப்பார், மாமிசம் உண்பதை தவிர்ப்பார் இது போன்று) அதே போல் நாம் வாழ்வதற்காக தம் வாழ்வை சந்தோஷங்களை தந்த எங்கள் மாவீரச்செல்வங்களை போற்றும் நாட்களில் கடைப்பிடியுங்கள். வெறும் அரசியலாக இந்த மாவீரர்களை பார்க்காதீர்கள் அவர்களின் உன்னதமான தியாகத்தை ஆர்த்மாத்தமாக பாருங்கள் இவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இதனை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள் இதுவே எமது அடுத்த சந்ததிக்கு சரியான முறையில் சரியான தெய்வங்களை வழிகாட்டும் வழியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
குறி சொற்கள்:
கருத்துக்கள்
Thursday, August 21, 2008
உணர்வை உசுப்பி
உணர்வை உசுப்பி
உயிரைப் பிழியும்
உன்னத கூட்டம் - நீங்கள்
தமிழர் தலையை நிமிர்த்தி
தரணியை மீட்கும்
தற்கொடைக் கூட்டம்!
உயிரைப் பிழியும்
உன்னத கூட்டம் - நீங்கள்
தமிழர் தலையை நிமிர்த்தி
தரணியை மீட்கும்
தற்கொடைக் கூட்டம்!
குறி சொற்கள்:
பாடல்கள்
தேசம் விடிய
தேசம் விடிய தீயாகி எழுந்து -
எதிரிக்குநாசம் விளைவித்த நாயகரே!
வீசும் காற்று சொல்லுது உம் வீரம் -
உயிரை தூசாய் மதித்த உத்தமரே!
எதிரிக்குநாசம் விளைவித்த நாயகரே!
வீசும் காற்று சொல்லுது உம் வீரம் -
உயிரை தூசாய் மதித்த உத்தமரே!
குறி சொற்கள்:
பாடல்கள்
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
நான் இன்றுதான் புதிய பதிவராக இணைந்திருக்கிறேன். என்னிடம் எந்த ஆக்கமும் உடனடியாக கைவசம் இல்லை. அதனால இந்த எனக்கு பிடித்த மாவீரர் புகழ் சொல்லும் பாடல் வரிகளை தருகிறேன். ஒவ்வொரு முறையும் இந்த பாடல்களை படிக்கும்போது என்னையறியாமலே கண்ணில் நீர் வரும். இந்த வீரமறவர்களும் எம்முடன் பிறந்தவர்கள் தானே எம்மைபோன்று ஆசைகள் கனவுகள் எத்தனை இருந்திருக்கும். எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது எமக்காக தங்கள் சந்தோஷங்களை இழக்க முடிகிறது. இவர்கள் உண்மையில் உத்தமர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது தெய்வங்கள்.
ஒரு முறை நீங்களும் படிச்சுபாருங்கள்,
"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!"
பாடல் : புதுவை இரத்தினதுரை
பாடியவர் : மாவீரர் மேஜர் சிட்டு
இசை : இசைவாணர் கண்ணன்
ஒரு முறை நீங்களும் படிச்சுபாருங்கள்,
"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!"
பாடல் : புதுவை இரத்தினதுரை
பாடியவர் : மாவீரர் மேஜர் சிட்டு
இசை : இசைவாணர் கண்ணன்
குறி சொற்கள்:
பாடல்கள்
Subscribe to:
Posts (Atom)


