நான் இன்றுதான் புதிய பதிவராக இணைந்திருக்கிறேன். என்னிடம் எந்த ஆக்கமும் உடனடியாக கைவசம் இல்லை. அதனால இந்த எனக்கு பிடித்த மாவீரர் புகழ் சொல்லும் பாடல் வரிகளை தருகிறேன். ஒவ்வொரு முறையும் இந்த பாடல்களை படிக்கும்போது என்னையறியாமலே கண்ணில் நீர் வரும். இந்த வீரமறவர்களும் எம்முடன் பிறந்தவர்கள் தானே எம்மைபோன்று ஆசைகள் கனவுகள் எத்தனை இருந்திருக்கும். எப்படி இவர்களால் மட்டும் முடிகிறது எமக்காக தங்கள் சந்தோஷங்களை இழக்க முடிகிறது. இவர்கள் உண்மையில் உத்தமர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது தெய்வங்கள்.
ஒரு முறை நீங்களும் படிச்சுபாருங்கள்,
"ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.
சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய
சந்தன மேனிகளே!
உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்
ஆரை நினைத்தீரோ!
நீங்கள் யாரை நினைத்தீரோ..!
வாசலில் காற்றென வீசுங்கள்
உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.
வென்றிடவே கரும் வேங்கைகளாகிய
வீரக் கொழுந்துகளே!
உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்
என்ன நினைத்தீரோ!
தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்
சாவைச் சுமந்தவரே!
உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்
ஆரை நினைத்தீரோ!
தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய
தாயை நினைத்தீரோ!
உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்
கையை நினைத்தீரோ!
நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்
நாயகனை நினைத்தீரோ!
உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்
சோகம்தனை நினைத்தீரோ!"
பாடல் : புதுவை இரத்தினதுரை
பாடியவர் : மாவீரர் மேஜர் சிட்டு
இசை : இசைவாணர் கண்ணன்
Thursday, August 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)



0 மறுமொழிகள்:
Post a Comment