Thursday, June 4, 2009

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.

சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.

ஒரே இலக்குடன் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நீங்கள் எதற்கு வெவ்வேறு இயக்கங்களை ஆரம்பித்தீர்கள் என்பதே புரியவில்லை எங்களுக்கு. சிவகுமாரன் தொடக்கி வைத்தான். டெலோ அமைப்பின் குட்டிமணி ஜெகன் தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட, பிரபாகரன் என்னும் துடிப்பும் வீரமும் நிறைந்த இளைஞன் வழி தொடர்ந்தான். சரி, சொந்தப் பிரச்சனையால் உமா மகேஸ்வரன் பிரிந்து போனான். புளொட் அமைப்பை உருவாக்கினான். எல்லாம் சரி. அதன் பிறகு சேர்ந்த இளைஞர்கள் ஒன்று பிரபாகரனுடன் அல்லது உமா மகேஸ்வரனுடன் அல்லது டெலோவில் சேர வேண்டியது தானே? எதற்கு மழைக்கு முழைத்த காளான்கள் மாதிரி புது புது இயக்கங்களை உருவாக்கினீர்கள்? தமிழ் ஈழம் என்ற ஒரே கொள்கை தானே உங்களிடம் அன்று இருந்தது? கண்ணீர்த்துளி போல இருக்கும் இலங்கையிலிருந்து பிரியப் போகும் தமிழ் ஈழத்தை ஆளுக்கொரு குறிசசியாகப் பிரித்து ஆட்சி செய்யவா? 8 மாவட்டங்களைக் கொண்ட தமிழ் ஈழத்தை வென்றெடுக்க அமைக்கப் பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா? 8 அல்லது அதற்கும் மேல்.டெலோ., L.T.T.E, ஈரோஸ்,புளொட், E.P.R.L.F., E.N.D.L.F., TELF, EPDP, . இவை என் ஞாபகத்தில் இருப்பவை. இதைவிட இன்னும் இருந்ததோ எனக்குத் தெரியாது.

கிட்டு, எங்கள் பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று கோண்டாவிலில் வைத்து டெலோ தலைவர் உயிர்ப் பிச்சை கேட்டும் சுட்டுக் கொல்லப் பட்டர் என்பதை நினைவு கூருகிறீர்களே,உங்கள் பிரச்சனை என்ன என்று எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் போகும் வரையிலும் ஒற்றுமையாய் இராணுவத்தைத் தாக்கிய நீங்கள் அதன் பிறகு உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்.கிடைப்பது எதுவானாலும் அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற சந்தர்ப்பவாதிகளுக்கும் தமிழ் ஈழம் என்ற நினைத்த குறிக்கோள் வேண்டும் என்ற லட்சிய வாதிக்கும் இடையில் சிக்கி திம்பு பேச்சுவார்த்தை சீரழிந்தது எமக்கும் தெரியும் “தோழர்களே.”

உங்களதும் புலிகளும் போராட்டங்கள் என் வயதுடன் வளர்ந்தவை. நித்தம் நித்தம் அவதானித்ததையும் அனுபவித்ததையும் மட்டுமே இங்கு சொல்கிறேன்.ஆனாலும் இந்தக் கொலைகள் விடயத்தில் புலிகளை அப்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டபோது நீங்கள் இப்போது நினைவு கூரும் வாசுதேவாவை,பாரூக்கை தெருவில் சுடப்பட்டுக் கிடந்த ஸ்ரீ சபாரத்தினத்தை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன், எதற்கு இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று ஆத்திரப் பட்டிருக்கிறேன். எங்களைப் புலிகள் இப்படி அழித்திருக்கா விட்டால் நாங்களும் எங்கள் மக்களுக்காகப் போராடியிருப்போம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையாக இருக்குமோ என்று நினைத்திருக்கிறேன்.
எல்லாம் 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் ஆரம்பிக்கும் வரைக்கும் தான். புலிகள் காட்டுக்குப் போனதும் இந்திய ராணுவத்தின் ஆளுகைக்குள் நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நீங்கள் கூறியபடி சந்தர்ப்பம் உங்களுக்குத் தரப்பட்டது.என்ன செய்தீர்கள் “தோழர்களே?” எங்களுக்காகப் போராட வேண்டாம், நாங்கள் அழிவதை, எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்தினீர்களா? இவற்றையெல்லாம் நீங்களே செய்தீர்களே?புலிகளை மட்டுமா நாங்கள் வளர்த்தோம்?உங்களையும் நாங்கள் தானே வளர்த்தோம்? உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டதற்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பழி தீர்த்துக் கொண்டீர்களே?

84,85 களில் எங்கள் வீட்டில் இருந்தே தினமும் 5 பேருக்கு சாப்பாடு பார்சல் போகும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் என்ற முறையில். ஆனால் புலிகளுக்கு உணவு கொடுத்ததாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசலில் துப்பாக்கியோடு நின்றீர்கள்.உங்களுக்கும் தானே தந்தோம் என்பதை மறந்து என் சகோதரனை மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே?
1988 இல செயின்ட். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் தேவகுமாரனை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்து முகமே அடையாளம் தெரியாதவாறு மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? அவன் செய்த தேசத் துரோகம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கிடையில் விநியோகித்தது தான்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானபோது நீங்கள் பிணமாகத் தெருவில் போட்ட தேவகுமாரன் உயிரியல் பாடத்தில் 4 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்தான்.
சொல்லுங்கள் “தோழர்களே” இவர்கள் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு ஆசிரியர் கிருஷ்னானந்தனை? தெருவோரம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியரின் மகன் அகிலனை? இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைக் கண்டித்து மறியல் போராட்டம் செய்ததற்காக சுட்டுக் கொல்லப் பட்ட மருத்துவபீட மாணவன் சத்தியேந்திராவை, ஏதோ ஒரு உத்வேகத்தில் புலிகள் இயக்கத்துக்குப் போய் விட்டு பயிற்சியின் கடுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 மாதத்திலேயே திரும்பி வந்து சாதாரண வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் மோகனை இந்திய ராணுவத்துக்குக் கூடத் தெரியாமல் விசாரணைக்கு என்று அழைத்துச்சென்றீர்கள். இரண்டு நாள் கழித்து அவனை சத்தகக் காம்பாலேயே உடல்முழுதும் குத்திக் கொலை செய்து கொண்டு வந்து தெருவில் போட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? எங்கேயோ கேட்ட துப்பாக்கிச் சத்தத்துக்கு அருகில் இருந்த கல்லூரிக்குள் சென்று வகுப்பறைக்குள் நீங்கள் சரமாரியாகச் சுட்டதில் பலியான மாணவர்களை, படுகாயமடைந்த மாணவர்களை, ஆசிரியரை,ஞாபகம் இருக்கிறதா?

இவர்களை ஞாபகப் படுத்த எனக்கு எந்தக் குறிப்பேடும் தேவைப் படவில்லை.ஏனெனில் நான் பள்ளி செல்லும் போது வழியில் தெருவில் கண்டு சென்ற பிணங்கள் இவர்கள்.பெண்களையும் சிறுவர்களையும் மயானத்துக்கு செல்ல அனுமதிக்காத சமூகத்தில் உங்கள் தயவாலும் இந்திய ராணுவத்தின் தயவாலும் பிணங்களையும் டயர் போட்டு எரிக்கப் பட்ட எலும்புக் கூடுகளையும் நாங்கள் தெருவில் பார்த்தே வளர்ந்தோம். உங்களால் பலவந்தமாகத் தேசிய இராணுவத்துக்கு என்று பிடித்துச் செல்லப் பட்ட என் ஒன்று விட்ட சகோதரன் இன்றுவரை உயிருடன் உள்ளான இல்லையா என்று எமக்குத் தெரியாது.

சொல்லுங்கள் தோழர்களே இவர்களில் யார் நீங்கள் சொன்னபடி கிட்டு அல்லது அவருடன் சேர்ந்து உங்கள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றார்கள்? துப்பாக்கிகளைக் கையில் வைத்திருந்த உங்கள் தலைவர்கள் யுகப் பிச்சை கேட்டும் புலிகள் கேட்கவில்லை என்று சொல்கிறீர்களே. நாங்கள் உங்களுக்கு எதிராகவோ இந்திய ராணுவத்துக்கு எதிராகவோ சிறு தடியைக் கூட எடுக்காமல் அல்லவே உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்டோம்?. உங்கள் தலைவர்கள் பெயர் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இவர்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? கிடையாது. நாங்கள் பாவப் பட்ட பொதுஜனங்கள்.ஆனால் உங்களால் கொலைகாரன் என்று சொல்லப்பட்ட கிட்டுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டு மாமா என்றே அழைத்தோம்.அவருக்கு ஒரு கால் போனதற்கே மக்கள் எப்படித் துடி துடித்துப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள்.

நானும் என் அண்ணனும் வீட்டில் தனியே இருந்தசமயம் உள்ளே நுழைந்த இந்திய ராணுவத்தினர் எங்களை தனித் தனி மூலைகளில் மடக்கியபோது, எனக்கு நடக்கவிருந்த கொடுமையின் முழு வடிவம் கூடத் தெரியாத வயதில் இராணுவத்தால் பக்கத்து அறைக்கு நான் நெட்டித் தள்ளப் பட்ட போது நீங்களும் அருகில் நின்றீர்கள்.விகாரச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தீர்கள்.. என்னைப் பிடித்துத் தன்பின்னே நிறுத்தி தன் துப்பாக்கியை தன் சகாக்களை நோக்கி நீட்டி என்னைக் காக்க ஒரு தமிழகத்துத் தமிழனால் மட்டும்தான் முடிந்தது. சொல்லுங்கள் “தோழர்களே” உங்கள் கையில் இருந்த ஆயுதங்கள் யாரைக் காக்க யாருக்கு எதிராக ஏந்தப் பட்டவை?ராஜிவ் காந்திக்கு நன்றி. குறைந்த எண்ணிக்கையிலேனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களையும் அமைதிப் படையில் அனுப்பி வைத்ததற்கு.அவர்கள் தான் தங்கள் சகாக்களிடமிருந்து மட்டுமல்ல உங்களிடமும் இருந்தும் தங்களால் முடிந்தவரையில் எங்களைக் காத்தார்கள்.

மேலே நான் சொன்னது அத்தனையும் யாழ் மண்ணில் மூன்று தெருக்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியில் அந்தக் காலப் பகுதியில் தாங்கள் உயர் ஜாதியினர் என்ற அகந்தையும் பரம்பரைக் கல்விமான்கள் என்கின்ற ஆணவமும் கொண்ட சுயநல சமூகமான எங்கள் முதல் தலைமுறைகளும் எங்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தாகக் கொண்டு போனால் போகிறது என்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் அளவுக்கு மட்டும் சமூக அக்கறை கொண்ட எங்கள் தலைமுறைகளும் வாழ்ந்த இடத்தில் – யாருடைய போராட்டத்துடனும் அதிகம் பட்டுக் கொள்ளாத மக்களுக்கு நீங்கள் நடத்திய கொடுமைகளின் சிறிய அத்தியாயம். இவர்களையும் ஆவேசம் உள்ளவர்களாக மாற்றியது உங்கள் நடவடிக்கைகள்.இவர்களுக்கே இப்படி என்றால் உண்மையாகவே முழுமனதுடன் போராட்டத்தை ஆதரித்த மக்களுக்கும், தமிழ் ஈழமண்ணின் எல்லா மாவட்டங்களிலும் நீங்கள் செய்ததைப் பட்டியல் போட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி ரத்தத்தில் தோய்ந்த இதிகாசங்கள் எழுதலாம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் குணங்களோ கூடப் பிறந்த சகோதரர் , பெற்றோரோ தங்கள் மானத்தைக் காக்க முடியாது என்று உணர்ந்த பெண்களும், தாங்கள் சொல்லும் மந்திரங்களும் கற்பூரம் காட்டும் கடவுள்களும் தங்களைக் காக மாட்டாது என்று பூணூலைக் கழட்டி எறிந்து விட்டு இளைஞர்களும் என எல்லா சமூகத்தவரும் இரவுகளில் வீட்டை விட்டு வெளியேறி கானகம் நோக்கிச் சென்றது உங்கள் அட்டகாசங்களால் தான். தங்கள் மகள் வெளியேறியபின்னர் இனி அவள் மானத்துடன் இருப்பாள் என்ற நிம்மதியில் நீங்கள் வந்து விசாரிக்கும் போது அவள் யாரோடோ ஓடிப் போய் விட்டாள் என்று தலை நிமிர்ந்து பெற்றோர் சொன்ன அதிசயம் நிகழ்த்திக் காட்டியவர்கள் நீங்கள்.

எங்கள் தேசியத்தலைவர் எத்தனை பெரிய தீர்க்கதரிசி என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர் இடத்தில் நின்று பார்க்க எனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை என்றாலும் ஒரு கணம் நின்று பார்க்கிறேன்.நீங்கள் சொன்னபடி உங்களுடன் ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இது என்ன தமிழ் நாட்டு அரசியல் மேடையா கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக் கொள்ள? ஆயுதப் போராட்டம். படைபலத்தை மட்டுமே நம்பி இருப்பது. போராடத் துணிந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையே கொஞ்சம். அதையும் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வீர்கள். அதன் பிறகு போராட்டத்தின் ஆரம்பத்திலேயே காட்டிக் கொடுப்பவர், தலைமைக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் போராட்டத்தைக் கைவிடும் இயக்கம், எதோ கொஞ்ச அதிகாரம் வந்தால் போதும் என்று விலகும் இயக்கம், ஒன்றும் வேண்டாம் மது,மாது, பதவி சுகம் கிடைத்தால் போதும் என்று கைவிடும் இயக்கம் என்று பிரிந்து சென்றால், போராடச் சேர்ந்த இளைஞர்களும் தவறான பாதைக்கு போக நேர்ந்தால், ஒரே லட்சியத்துடன் போராடுபவன் என்ன செய்ய முடியும்? உங்களை அவர்கள் தங்கள் லட்சியப் பாதையிலிருந்து அகற்றிய படியால் தான் தமிழ் ஈழப் போராட்டம் மாபெரும் சக்தியாக எழுந்தது. இன்று உலக நாடுகள் அனைத்தும் , ஐ.நா. வரைக்கும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களாலும் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளாலும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலாலும் மட்டுமே தான்.அவர்கள் உங்களை அகற்றிய விதம் தப்பாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் லட்சியத்தின் தடைக் கற்கள், அகற்றப் பட வேண்டியவர்கள் என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்களே? தலைவர் தான் ஆள வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.போராட்ட இலக்கு தமிழ் ஈழம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே இதைச் செய்துள்ளார். ஈரோஸ் இயக்கத்தை புலிகள் அப்படியே உள்வாங்கிக் கொண்டதும் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் இதற்குச் சான்று.

.உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான். அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்காக போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா? இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?

முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்

மதியழகி

நன்றி - மதியழகி, நெருடல்.com

Friday, May 22, 2009

பிரபாகரன் விரைவில் வருவான்: அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்

ஆயினும் போரது நீறும், புலி

ஆடும் கொடி நிலம் ஆறும்.

பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்

பாசறை ஆயிரம் தோன்றும், கருப்

பைகளும் ஆயுதம் ஏந்தும்.

மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை

மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த

சிங்கள கூட்டங்கள் ஓடும்.

-இணையத்தில்இன்று காலை நான் கண்ட கவிதை இது. எழுதியவர் புதுவை இரத்தினதுரையாக இருக்க லாம். படித்துச் சிலிர்த்து நின்ற வேளை தொலைபேசி அழைப்பொன்று வந் தது. கடந்த நான்கு நாட்களாய் தொலைபேசிய அந்த முக்கியமான வரை தொடர்பு கொள்ள நூறு முறையேனும் முயன்று மனக் களைப்புற்றிருந்தேன். களநிலை பற்றின பொய்யும் புனைவுமிலா உண்மையை தரவல்ல நிலையில் உள்ளவர் அவர். வானகத்தின் தூதுவன் நேரிடை வந்தது போல வந்தது அந்த அழைப்பு. அவர் சொன்னார்: ""கவலை ஏதும் வேண்டாம். தலைவர் பாதுகாப்பாக உள்ளார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதி செய்யப்பட்டபின் உலகோடு அவர் பேசு வார்''. தமிழீழ எல்லைகளின் காவலன் நல் லூர் முருகனும் எனது லூர்து மாதாவும் துணையிருந்தார்கள். படித்த கவிதை சந்தம் கட்டி என் மனதில் பாடலாய் துள்ள லாயிற்று. "பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப்பை களும் ஆயுதம் ஏந்தும்'.

எட்டு பத்து ஆண்டுகளுக்கு முன் இதே புதுவை ரத்தினதுரை எழுதிய கவிதையின் மறக்க முடியாத சில வரிகள் நினைவு வெளியில் கை வீசி நடந்தன.

""வா பகையே... வா...

வந்தெம் நெஞ்சேறி மிதி.

பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.

வேரைத் தழித்து வீழ்த்து.

ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்

நினைவில் கொள்!''

புதுவை ரத்தினதுரையின் கவிதைகள்பால் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது 1995-ம் ஆண்டு. அதிபர் சந்திரிகா குமார துங்கே யுத்த வெறி கொண்டு முப்படைகளையும் அவிழ்த்து விட்டு யாழ்ப்பாணத்தை சிறைப்படுத்திய காலம். யாழ்ப்பாணத்தில் சிங்க முத்திரை பொறித்த சிங்களக் கொடியை ஏற்ற அன்றைய ராணுவ அமைச்சர் அனுருத்த ரத்வத்தே வந்தார். அக்கொடியை சுமந்து வந்தது யாழ்ப்பாணத்து மேயராக இருந்த தமிழர். பெயர் மறந்துவிட்டேன். வடதமிழீழத்து இதயமாம் யாழ்ப்பாணத்திற்கு சிங்கக் கொடி சுமந்து வந்த மேயர் மீது புதுவைக்குச் சீற்றம். நீண்ட கவிதையொன்று எழுதியிருந்தார். இரண்டு வரிகள் மட்டும் அடித்த ஆணிபோல் நினைவில் பதிந்து நிற்கின்றன.

""மேயர் அவர்களே

நீவிர் சிங்கக் கொடியை சுமந்து வந்தபோது

மின்னும் ஜரிகை கரை கொண்ட

பட்டு வேஷ்டி கட்டி வந்ததாய் அறிந்தேன்.

கக்கூஸ் வாளிக்கு தங்க முலாம் பூசுவதில்லையே?!

-அறுபதாயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழ் உயிர்களை கொன்றழித்து, இரண்டரை லட்சம் பேரை சொந்த மண்ணில் அகதிகளாக்கி, முப்பதாண்டு கால விடுதலைப் போராட்டத்தை நீசத்தனமாய் நிர்மூலம் செய்த ராஜபக்சே கும்பலுக்கு வன்னிப்பரப்பில் சிங் கக் கொடி தூக்க நாக்கை தொங்கவிட்டுக் காத்திருக்கும் ஆனந்தசங்கரி வகையறாக்கள் ஒரு கணம் நினைவுக்கு வந்தபோது புதுவையின் கவிதையும் உடன் சேர்ந்து வந்தது. ""கக்கூஸ் வாளிகளுக்கு தங்க முலாம் பூசுவதில்லையே...?! ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்த சங்கரிகளே இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட் டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான். வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது. கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கி றார்கள். கடற் புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர் கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச "அதிகாரப்பூர்வமற்ற', ஆனால் யதார்த்த மான முடிவொன்று தரப்பட்டது. ""விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப் பூர்வமாய் தொலைநகல் (எஆல) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்''. இரவு 10 மணி ஆயிற்று. இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார். ""இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்'' என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ் பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். ""கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது'' என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணு வத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூத ரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம் ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தை கள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது. "முல் லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள் ளைக்கொடி பிடித் துக் கொண்டு இலங் கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் களை ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்' என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம்... செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன். யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற் கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது. விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வ தாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது. நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடா தென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கரு ணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற் கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன். மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந் தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால் தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார். ""கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?'' என 2002-ல் அவரிடம் கேட்டேன். ""இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்'' என்றார். தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடிய வில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்.

நன்றி நக்கீரன் வார இதழ்

Tuesday, May 12, 2009

தயவுசெய்து மாறுங்கள்

"வைக்கல் பட்டடை நாய்" என்று சொல்வார்கள் அது அப்பிடியே எங்கட இனமான தமிழினத்திற்குத்தான் பொருந்தும். ஏனென்றால் பாருங்கள்,

எங்கட நாடு பற்றி எரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எங்கட அம்மா அண்ணை அக்கா எல்லாரும் எரிகுண்டுகளாலும் பசியாலும் நாளாந்தம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எங்களின் உறவுகள் புலம்பெயர் தேசங்களிலிருந்தவாறு பல்வேறுபட்ட போராட்டங்கள்…..தங்களை பசியால் வாட்டி அந்தந்த நாட்டின் அரசிற்கு தங்களின் வேதனையை புரியவைக்க முற்படுகிறார்கள், வீதித்தடைகளை ஏற்படுத்தி கவனத்தையீர்க்கப்போராடுகிறார்கள் ஏன் அண்மையில் இந்தியத்தொலைக்காட்சியில் ஒரு கலைஞர் தன் நடனத்தின் மூலம் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார். இவ்வாறு ஏதோவொருவகையில் ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை வேதனைகளை வலிகளை காட்டுகிறார்கள். அம்மா உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சிரிச்சுக்கொண்டா இருக்க முடியும் எல்லோரும்தான் அழுவார்கள் அதைத்தடுத்து நிறுத்தப்போராடுவார்கள்…போராட உணர்த்தப்படுவார்கள் அப்படி உணராவிட்டால் பிறகென்ன மனிதர்கள் நாங்கள். நான் ஏன் இதைச்சொல்ல வாறேனென்றால் இப்படி உணராதவர்கள் பலர் நம்மத்தியில் இருக்கிறார்கள்.

அங்கு போராடத்துணிவில்லை சரி இங்குவந்தோம் இங்கு எமதுயிருக்கு எந்த பாதிப்புமில்லை என்றவிடத்தில் நாம் இங்கிருந்தவாறு போராடலாம் சரி அதற்கும் சில நாடுகளில் வழியில்லையென்று வைத்துக்கொள்ளுங்களேன் இணையத்தளங்களினூடாக பல பத்திரிகைச்செய்திகள் வருகின்றன அதற்கு கருத்துகள் எழுதுவதிலும் கருத்துக்கணிப்புகளில் பங்குபற்றுவதிலும் ஆர்வம் காட்டலாம். இதை "ஏதாவது செய்யவேண்டுமென" நினைப்பவன் நிச்சயம் செய்வான். ஆனால் சிலர் இருக்கிறார்கள் இதைச்செய்யமாட்டார்கள் (இதுக்கு அவர்களின் 1008 நியாயப்படுத்தல்கள், அதை விடுவம்) சரி இவர்கள் போராடுபவர்களை வாழ்த்தக்கூடவேண்டாம் கொச்சைப்படுத்தாமல் பேசாமல் இருந்தால் கூட எவ்வளவு மேலான விடயமாகவிருக்கும். ஆனால்,

ஒருவன் பசியால் தன்னை வருத்தி போராடிக்கொண்டிருக்கிறான். இந்த புண்ணியவான்கள் என்ன கதைக்கிறார்கள்……….இவன் இயக்கமாயிருக்கும் இல்லாட்டில் அவே பயிற்சிகுடுத்து அனுப்பியிருப்பினம்" இப்படி பல. ஒருதன் நடனத்தின் மூலம் தன் வேதனையை வலியை சொல்லுகிறான் உடனே இந்த புறம்போக்குகள் என்ன சொல்லுதென்றால் " இவனையும் இவன் குழுவையும் இயக்கம்தான் பயிற்சிகுடுத்து அனுப்பியிருக்கு" எப்பிடியிருக்கும். அடே முட்டாள்களே உங்கட அம்மா வலியால் துடிக்கும்போது உங்களை அழுறதுக்கு பயிற்சி கொடுத்தா அனுப்ப வேண்டும் கொஞ்சமாவது யோசிச்சுத்தான் கதைக்கிறீர்களா?

புலம்பெயர் நாடுகளில் பலர் வீதியில் இறங்கி பல்வேறுவகையில் போராடுகிறார்கள். பொலிஸில் அடிவாங்கி இரவு பகலா குளிரிக்க நின்று போராடுறாங்கள் என்னடா என்று இந்த புறம்போக்குகளிடம் கேட்டால் " இவங்கள் என்ன உண்மையான உணர்வோடையா போராடுகிறாங்கள் சும்மா பம்பலா போய் கூத்தடிக்கிறாங்கள், இவங்களுக்கு போராட்டத்தின் அடி நுனி தெரியுமோ? " என்கிறார்கள். இவங்களுக்கு குளிரிக்க போய் இரவு பகலா வீதில நிக்கிறது பம்பலா கிடக்கு எங்க நீ போய் பம்பலா நில் பார்ப்பமென்றால் முடியாது. யோசிப்பதேயில்லை சும்மா கதைக்கவேணுமென்றதுக்காக கதைப்பது. என்ன ஒவ்வொருவனுக்கும் எவ்வளவு உணர்வு இருக்கு போராட்டத்தைப்பற்றி என்ன தெரியுமென்று நேர்முகத்தேர்வு நடத்தியா போராட்டத்திற்கு அனுப்பமுடியும். அவன் அவன் தன்னெழுச்சியா காலத்திற்கெற்றவாறு போராடுகிறான் அதுவே போதுமே வேறயென்ன வேண்டும். சரி நீ போராட்டத்தின் அடி நுனி தெரிஞ்சனி போய் செய்யென்றால் அது முடியாது அதுக்கு 1008 நியாயப்படுத்தல் சொல்லி பின்வாங்கிறது. இதுக்காகத்தான் சொன்னேன் வைக்கல் பட்டடை நாய்கள் என்று இவர்களை.

இந்த புறம்போக்குகள் அடிக்கடியொன்றை சொல்லுவார்கள். நாங்கள் வெறிபிடித்தவர்களாம் இப்ப மக்கள் கொல்லப்படும்போது கதறுகிறோமாம் சிங்கள இடத்தில் குண்டு வெடித்து மக்கள் சாகும்போது மட்டும் சந்தோஷப்படுகிறமாம். இவர்களுக்கு ஒன்றைச்சொல்லுகிறேன் நாங்கள் சந்தோஷப்பட்டதுமில்லை ஆனால் அதே நேரம் கவலைப்பட்டதுமில்லை. ஏனெனில் என்னுடைய வீட்டில் அக்காவை கோரமாக கண்முன்னால் கற்பழிச்சு கொலைசெய்ய அதைப்பார்த்த ஆத்திரத்தில் அண்ணன் போய் அவனுடைய குடும்பத்தை கொலைசெய்தால் நானென்ன அண்ணனை கண்டிக்கவா முடியும் அந்த குடும்பத்திற்காக கவலைப்படவா முடியும் இப்படி அண்ணனை செய்யவைத்துவிட்டாயே என்று கவலைப்படத்தான் முடியும். ஏன் அவனை கொலைசெய்யாமல் அவன் குடும்பத்தை கொல்லவேண்டுமென கேள்விவரும். அவன் ஒவ்வொருமுறையும் அவனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிற அண்ணனுடன் சண்டையிடாமல் சுலபமா போய் அப்பாவியான அக்காவைத்தான் தாக்கினால் அவனுக்கு அண்ணன் வேறயெவ்வாறு பதில்கொடுக்கமுடியும். சரி இதையெல்லாவற்றையும் விடுவம். இன்றைக்கு என்ன நடக்கிறது எங்கயாவது சிங்கள இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா? தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். என்ன நியாயம் கிடைத்தது?

நானும் முன்னர் இப்படித்தான் ஏதாவது யாராவது தீவிரமா போராடினால் அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து இவர் இயக்கமாத்தானிருக்குமென்று ஊகிச்சு கதைப்பது, பின்னர் இப்பதான் உணர்ந்தேன் நான் எவ்வளவு கேவலமா கதைத்திருக்கிறேனென்று ஒரு மனிதனுடை உண்மையான உணர்வை மதிக்கத்தவறியிருக்கிறேன்று. இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன். உண்மையில் ஒரு போராளியின் உணர்வைத்தான் விளங்கிக்கொள்ளத்தவறியிருக்கிறேன் ("இயக்கமாதானிருக்கும்" என்றதிலையே எதோ இயக்கமென்றது ஒரு பயிற்றப்பட்ட இயந்திரம் என்ற கருத்தே தொக்கிநிற்கிறது). ஆகவே இப்பவும் இதே புறம்போக்குத்தன்மையுடனிருக்கும் நண்பர்களே தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுசேர்ந்து போராடுவோம். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Friday, May 8, 2009

ஈழத்து நடனப்புயல்

இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு தமிழீழ மகன் மிக அருமையாக தனது நடனத்தின் மூலம் ஈழத்து இனப்படுகொலையை மிக உணர்ச்சிகரமாக வெளிக்காட்டியுள்ளார்



எமது மக்களின் துயரங்களை வெளிக்கொணர்வதில் தொடர்ந்து இந்திய தொலைக்காட்சிகள் பின்னடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த தொலைக்காட்சியொன்றின் சாதரண நிகழ்ச்சியொன்றின் ஊடாக மிக அழகாக எம் மக்களின் துயர்களை தத்ருபாமாக காட்டியுள்ளார் நடனக்கலைஞர். அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் இப்பவும் இணையத்தளங்களூடாக பார்க்கின்றவர்களையும் கண்ணில நீர் வருமளவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நடனம் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அவர் குழுவினருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.

Thursday, May 7, 2009

சீனாக்களோடு ஒரு நாள் சாப்பாடு

எனக்கு இந்த நாட்டுக்கு வரமுன்னுக்கே சீனாக்களின் சாப்பாட்டைப்பற்றி நிரம்ப கேள்விஞானமிருந்திச்சு; தவளை சாப்பிடுவாங்களாம், கரப்பொத்தான் பாம்பு என்று என்னெனமோ எல்லாம் சாப்பிடுவாங்க என்று கேள்வி. சத்தியமா சொல்லிறேங்க இங்க வந்தப்பிறகுதான் கேள்விப்பட்டன் இவற்றோடு நாய், பூனை, எறும்பு எல்லாம் சாப்பிடுவாங்களாம் (என்ன வேடுவப்பிறவியளோ). இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட பிறகு யாருகாச்சும் சாப்பிட மனம்வருமோ அப்பிடித்தாங்க எனக்கும்


ஆனால் எங்கட ஆபிஸில அன்புத்தொல்லை தாங்கலாது.எத்தினை நாளைக்குத்தான் நான் மரக்கறிதான் சாப்பிடுவனென்று புளுகிக்கொண்டிருப்பது. இதால ஒரு நாள் அவங்களோட போய் சாப்பிட வெளிக்கிட்டன். என்னடா இது எங்கட இடமென்றால் சாப்பாட்டு கடைக்கில உள்ளடக்கையே ஆசையாத்தான் இருக்கும் இதென்ன கோதாரியென்றால் ஆத்தே மணமென்றாலோ…….site office ல சீனன் ஒருதன் lunch box ய் திறக்கேக்க நாங்கள் ஓடுற ஓட்டத்திலயே தெரியும் அதுக்காக இந்த hotel லிலுமா

ஒருமாதிரி அங்கல போய் ஒரு மேசைல இருந்தோம். நல்ல வடிவான மேசை, நல்ல வெள்ளக்கலரில மேசைச்சீலையும் விரிச்சுக்கிடந்துச்சு. கோப்பையல் தடியல் எல்லாம் கொண்டுவந்து வைச்சார்கள்.நான் அந்த தடியை திருப்பிக்குடுத்திட்டு கரண்டி வாங்கினேன். எனக்கு அந்த தடியால சாப்பிடறதெல்லாம் வராது (அதென்ன கோதாரிக்கு தடியை வச்சு ஆட்டுறவங்களோ தெரியாது). சரி சாப்பாடு வந்திச்சு, இன்றைக்கு சத்தி வராமல் மானத்தை காப்பற்ற வேணுமென்று எல்லா கடவுளையும் நினைச்சுக்கொண்டு தொடங்கினன். உண்மைலே அந்தப்பக்கம் கடவுள் எட்டியும் பார்க்கமாட்டார் ஏனெனில் மனிதனை தவிர்ந்த எல்லாம் மேசைல வைச்சிருக்கு பிறகெப்படி அந்தாள் எட்டிப்பார்ப்பார். பக்கத்தில இருந்தவரை தட்டி இதென்னென்று கேட்டேன் அவரும் chicken என்றார் அப்பா நிம்மதி எதோ தெரிந்தவொன்றிருக்கே என்ற நிம்மதி. தீர்மானிச்சாச்சு இதில ஒரு பெரிய துண்டை எடுத்து இதோடயே இன்று முழுக்க சாமாளிப்பதென. பெரிய துண்டை தூக்கி கோப்பைக்கில போட்டு சாப்பிடத்தொடங்கினால் அறு சுவையில ஒரு விதமான ரேஸ்டையும் காணோம். இதெப்படி செய்ததென்று பக்கத்தில கேட்டால் அப்பிடியே செட்டைகளை உரிச்சிட்டு அடுப்புக்கு மேல கிழமைக்கணக்கா தொங்கவிட்டுட்டு அதெயெடுத்து சாப்பிடுவாங்களாம். அப்பதான் யோசிச்சன் அடப்பாவி இவங்க இப்பதான் மனிதன் ஊனை சுட்டு சாப்பிட்டால் சுவையென்று கண்டதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறாங்கள். அய்யோ எப்படித்தான் சாமாளிக்கப்போறனோ என்றவாறு மற்ற item ங்களை பார்க்கக்கே இது பராவாயில்லையென்று கிடந்திச்சு.


அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு சரி அவங்கள் எப்படித்தான் சாப்பிடிறாங்கள் என்று பார்ப்பமென்று தலையை நிமிர்த்தினால் அடச் சீ அப்பதான் யோச்சன் ஏன் தான் பார்த்தமென்று. உண்மைலே சாப்பட்டு மணத்துக்கு அடக்கி வச்சிருந்த வயிறு குமட்டத்தொடங்கியது. எல்லாரையும் பார்க்கிறன் அப்படியே அந்த தடியால எடுத்து முழுசா வாய்க்குள் போட்டு சப்பு சப்பு என்று சப்பிட்டு மிச்சம் மீதியை மேசைல துப்பிவிடுவாங்கள் ( நாயில இருந்து கொஞ்சம் தான் develop ஆகியிருப்பாங்கள் போல). அப்பிடியே மேசையெல்லாம் பரவிக்கிடக்கும். இதைவிட எங்களுக்கு எதெல்லாம் indecent வேலையல் என்று சொல்லித்தந்தார்களோ அதெல்லாத்தையும் செய்வார்கள். ஒருதனை பார்க்கிறன் அப்பிடியே சாப்பிட்டுக்கொண்டு மூக்கை தோண்டுகிறான் எப்பிடியிருந்திருக்கும் எனக்கு. இப்படியா ஒரு மாதிரி அன்றய சாப்பாடு முடிஞ்சுது. ஆனால் இப்ப என்ன ஒரளவுக்கு பழகிட்டுது (அதுக்காக நான் வேடுவ காலத்துக்கு போயிட்டனென்று நினைக்கதிங்க)

Wednesday, May 6, 2009

கருணாநிதியின் போர்நிறுத்தம்?????

//இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி தான் இருந்த உண்ணாவிரதம் வெற்றிபெற்றிராதுவிட்டால் ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகில் தற்போது தானும் இருந்திருப்பேனென தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி கருணாநிதி திடீரென அண்ணா சமாதியில் ஆறு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்ததற்கான காரணத்தை விளக்கி முதல்வர் கருணாநிதி உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது, தமிழர்களைக் காத்திட எனது உயிர் பயன்பட்டால் என்ன என்று தான் யாருக்கும் தெரிவிக்காமல் உண்ணாவிரத முடிவை எடுத்தேன். வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட தெரிவிக்கவில்லை. உண்ணாவிரதம் வெற்றிபெற்றதால் தான் உங்களோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் விருதுநகர் சங்கரலிங்க கல்லறையின் அருகிலோ, ஈழத்து திலீபன் கல்லறைக்கு அருகிலோதான் இருந்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நடத்தி இனப்படுகொலையை ஓய்வின்றி மேற்கொண்டுவரும் நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இருந்தாலும், இது ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.//


இச்செய்தி கடந்த சிலநாட்களுக்கு முன்னம் வந்திருந்தது. ஏன் இன்றைக்கு நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட கருணாநிதியும் திமுக வினரும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

என்னப்போல கடைசி 1% நம்பிக்கை வைத்திருந்தவர்களின் நம்பிக்கையும் போச்சு.

ஏனய்யா கருணாநிதி இந்த பச்சைத்துரோகம்…………….மன்னிக்கவேண்டும் என்னால இதைத்துரோகமாகத்தான் பார்க்கமுடியுது. ஏனெனில் தன்னை தலமையாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகம் தன் உறவுகள் கொல்லப்படுகிறார்கள் என்று கதறி கதறி காப்பாற்ற சொல்லிக்கொண்டிருக்கும்போது அந்த சமூகத்தை திசைதிருப்பும் விதமாக அல்லது குழப்பும் விதமாக போர் எல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டது நீங்கள் கதறத்தேவையில்லை என்று (போர்நிறுத்தப்படவில்லை என்று தனக்கு நல்லா தெரிந்தும்) நம்பவைக்க முயற்சிப்பதை துரோகமென்றாமல் வேறயென்னவென்று சொல்ல..

அன்றைக்கு கருணாநிதி அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி, மத்தியரசை நோக்கி போரைநிறுத்து இல்லாவிட்டால் அனைவரும் பதவி விலகுவோமென காலக்கெடு விதித்து போராட்டம் நடத்தும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டோம். இவ்வளவுகாலம் வெளிப்படுத்தாவிட்டாலும், தான் ஆடவிட்டாலும் தன் தசையாடுமென்பார்கள் அதுபோல எமக்காக கொதிக்கிறாரே என்று இனி இல்லையென்ற சந்தோஷம் எங்களுக்கு..
ஒன்றில் எமக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் தூக்கியெறியப்படும் அல்லது போர்நிறுத்தமேற்பட்டு நல்ல தீர்வு வருமென் ஒவ்வொரு பொழுதும் என்ன நியூஸ் என்று ஆவலுடன் அந்த காலக்கெடுவை எதிர்பார்த்துக்கிடந்தோம். பின்னர் அந்த பதவி விலகல் போராட்டத்திலிருந்து விலகியபோதும்கூட எமது சந்தோஷத்தில் சின்ன குறைச்சலேயொழிய நம்பிக்கை இழக்கவில்லை. எப்பிடியோ கருணாநிதி எமது நன்மைக்காக பாடுபடுபவரே என்ற நம்பிக்கை. அவர் பிழை விடமாட்டாரென்ற நம்பிக்கை. அவர் பதவி விலகலை செய்திருந்தால் வேறயொரு தமிழின துரோக கட்சியொன்று காங்கிரஸிற்கு முண்டுகொடுத்திருக்கும் அதால எமக்குத்தான் தீமை என்று கருணாநிதி எண்ணியிருக்கலாமென நாம் எமது மனதை தேற்றி நம்பிக்கையுடனே தான் இருந்தோம்.

பின்னர் அந்த மனிதச்சங்கிலிப்போராட்டம் இது அந்த சின்ன மனக்குறைச்சலையும் நீக்கியது.

முத்துகுமாரைத்தொடர்ந்து பலர் எமக்காக தீக்குளிச்சு தம் இன்னுயிரை தந்தபோது, கருணாநிதி வெறும் தந்தியனுப்புதலும், டில்லி போய் பேசுவதுமாகதானிருந்தார். இதையிட்டு எமக்கு சற்று கோபமேயொழிய நம்பிக்கை வைத்துக்கொண்டுதானிருந்தோம்

பின்னர் ஈழப்பிரச்சனையை கதைப்பதற்கென்று சட்டசபையை கூட்டப்போறதாக செய்தி கேள்விப்பட்டதும் சந்தோஷப்பட்டம். இருந்தும், அக்கூட்டத்தில் வெறும் சகோதர யுத்தத்தை கதைத்து தேவையற்றவற்றை கதைத்து உருப்படியா எதையும் செய்யாத போதும் பாதி நம்பிக்கை இழக்கவில்லை.

ஆனால் இன்றைக்கு உங்கள் உண்மையான முகத்தை நீங்களே இதுதான் என் முகமென காட்டிவிட்டீர்களே இனி எப்படி நம்பிக்கை வைப்பது. துரோகியென்று கூடவல்லவா காட்டிவிட்டீர்கள் பின்னரெப்படி மனதை தேற்றுவது……. சீ...........கருணா…..என்ற பெயரைக்கேட்கவே அருவருப்பாகவிருக்கிறது.

இப்பதான் என்னைப்போன்ற கொஞ்ச முட்டாள்களுக்கு புரிந்தது நீங்கள் அன்றைக்கு பதவி விலகலிருந்தே உங்கள் நாடகத்தை தொடங்கிவிட்டீர்கள் என்று. என்ன இப்ப நீங்கள் உங்கள் நடிப்பில் சற்று சொதப்பிவிட்டிங்கள். அதால எங்களுக்கு புரிந்துவிட்டது இது நாடமென்று. இதற்காக உங்கள் எஜமானி சோனியா சின்னனா கோவிச்சிருப்பா என்ன?



Wednesday, April 29, 2009

ஜனநாயக தேர்தல்

ஒரு இந்தியத்தாய்(தமிழரல்ல) தன் மகளுடன் பஸ்ஸில எங்கோ பயணித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் மடியில் அவள் மகள் நல்லா உறங்கிக்கொண்டிருக்க அந்த தாய் ஏதோ ஒரு ஹிந்தியில் எழுதிய துண்டுபிரசுரமாதிரியொன்றை வைத்து வாசித்துக்கொண்டே வந்தாள். அந்த பஸ்ஸில நானும் இவர்களுக்கு பக்கத்தில நின்றுகொண்டு பயணித்துகொண்டு இத்தாயை அவதானிச்சுக்கொண்டே வந்தேன். அவள் அந்த துண்டை வாசித்து முடிப்பதும் மற்றக்கையில் வைத்திருந்த முத்துமாலை மாதிரி ஒன்றிலுள்ள முத்தை தொடுவதும் பின்னர் மீண்டும் அதை வாசித்து முடித்து அந்த மாலையிலுள்ள அடுத்த முத்தை தொடுவதுமாக அவளின் செயற்பாடு இருந்திச்சு. இவற்றை பார்த்தவுடன் என் மனதுக்குள் பலவாறான மனவோட்டம் பல சிந்தனைகள். கேட்டுகொண்டிருக்கிற பாட்டின் தன்மையும் சேர்ந்தோ என்னவோ தெரியலை (காதுக்க பாட்டுப்பெட்டியையும் கொலுவிக்கொண்டே பயணிப்பது வழக்கம்) எதோ ஒரு இனம்புரியா உணர்வால் நெஞ்சு கனக்க அது கண்ணீராக கண்கள் கலங்கியது. நச்சுக்குண்டேவி கொல்லப்பட்ட ஒரு போராளியின் உடல் தோற்றத்தை பார்த்த அப்போராளியின் தாயுனுடைய வேதனை கதறல் மனக்கண்முன் வந்து போனது. இதே இந்திய தாயுனுடைய அரசுதானே ஈவிரக்கமின்றி விலங்கினங்கள் மீதே வீசத்தடைசெய்யப்பட்ட குண்டை ஏவி கொல்லுகிறது. ஜனநாயக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசென்றால் இந்த தாயின் பிரதிபலிப்பாகத்தானே அந்த அரசுமிருக்கவேண்டுமென மனம் எண்ணத்தோன்றினாலும் சீ அப்பிடி இருக்க வாய்ப்பே இல்லை என்றே அந்த தாயை பார்க்கும்போது தோன்றுகிறது. ஏனென்றால் அந்த தாய் முத்தை எண்ணி எண்ணி எதோ ராம நாமமெ உச்சரித்துகொண்டு பயணிக்கிறாள் என்று நினைக்கிறன் அப்படி ஒரு பயபக்தியுள்ள (மூடநம்பிக்கையாக இருந்தாலும்) ஒரு பாசமுள்ள தாயாகத்தான் எனக்கு தெரிகிறாள். அப்படிப்பட்டவளை எப்படி இந்திய அரசுடன் ஒப்பிடுவது? அப்படியென்றால் ஜனநாயகமென்பது போலியா என்றால் இலங்கை, இந்தியாவை பொறுத்தவரையில் அது பொருத்தமில்லாத ஒன்றுதான்.

ஜனநாயகமென்பது ஜனநாயக அரசென்பது உண்மையில் அந்த அந்த நாட்டுமக்களில் பெரும்பான்மையானோரின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்த நாடுகளினுடைய மக்களில் பெரும்பாலனோரின் பொதுவறிவு, அரசியல் அறிவு, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் தன்மைகளை பார்ப்போமென்றால் மிகவும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இத்திறன்கள் தமது உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும் தமது சமூகத்தை வெற்றி நோக்கி வழிப்படுத்தும் தலைவர்கள் யார் என்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்க உதவுகின்றது. அதே நேரம் இவர்கள் நாட்டின் பொருளாதார நிலை ஒருவகையில் காரணமாகிறது. ஏனெனில் உயர் பொருளாதார நிலை காரணமாக இவர்களுக்கு உடனடித்தேவையென்று எதுவுமே இருக்கப்போவதில்லை (பெரும்பாலனோர் அடிப்படைதேவைகளை நிறைவுசெய்தவர்களாகவே இருக்கிறார்கள்). ஆகவே இவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்கள் எதிர்கால நன்மைகளையே. அதனால இவர்களால் நிதானமாக சிந்தித்து தங்களின் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களின் பொருளாதாரனிலை மிகவுயர்ந்ததாகவிருப்பதால், எந்தவொரு ஆசைவார்த்தைக்கும் எடுபட்டு தங்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதனாலதான் இங்கு ஜனநாயக ஆட்சியென்பது மிகவும் பொருத்தமாகவும் வெற்றிகரமாகவுமிருக்கிறது.

ஆனால் எங்களுடைய நாடுகளை பொறுத்தவரை இது வெற்றிகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இது ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் நாட்டுமக்களின் அறிவுத்திறனை பார்த்தால் பெரும்பாலனோருக்கு குறைவாகவே உள்ளது அதிலும் அரசியல் அறிவு என்னும்போது பூஜ்ஜியமாகத்தான் உள்ளது. இப்படியிருக்க இவர்கள் எப்படி சுயமா சிந்திப்பார்கள் தமக்கு நன்மை செய்யக்கூடிய தமது உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களிலும் பெரும்பாலனோர் இன்னமும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியோராய்தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன அம்மா ராம நாமத்தை 108 தரமோ 1008 தரமோ திரும்ப திரும்ப வாசிக்கின்றனேரம் எதோவொரு உலகநடப்பு பத்திரிகையை வாசித்துக்கொண்டுவந்திருந்தால் தன் அரசியலறிவை கூட்டியிருக்கலாம் ( தன்னுடைய நாட்டரசு என்ன செய்கிறது என்றாவது அறியலாம். நிச்சயமாக அந்த அம்மாவுக்கு இலங்கையில் போர் நடக்கிறது அதை தான் தேர்ந்தெடுத்த அரசுதான் உதவிசெய்து கொண்டு நடத்துகிறது அப்பாவிமக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை).
மேலும், எமது நாட்டுமக்களில் பெரும்பாலனோர் யாதார்த்தத்தை புர்ந்துகொள்ளதவர்களாகவே உள்ளனர். இதனால் எமது நாட்டின் பொருளாதார நிலமை என்ன….எடுத்தோம் கவுத்தோமென சும்மா உச்சத்துக்கு போய்விடமுடியாது என்பவற்றை புரிந்துகொள்ளாதவராகவே உள்ளனர் இதனால்தான் சும்மா ஒருதன் வந்து பசப்புவார்த்தைகளை அள்ளித்தந்து தான் அப்பிடிச்செய்வேன் இப்படிச்செய்வேனென்றால் உடனே அவனுக்கு தமது வாக்கைப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம் எம்மில் பெரும்பாலானோர் இன்னமும் அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவுசெய்யவில்லை இவர்களுக்கு உடனடித்தேவைகள் பல, அப்படியானவர்கள் பணத்திற்கும் உடனடிசலுகைகளுக்கு எடுபட்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலமையில் நாம் எப்படி எமது நாடுகளில் மக்களினை பிரதிபலிக்கும் அரசுதானிருக்குமென எதிர்பார்க்க முடியும்?

என்னைப்பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தேசங்களுக்கு ஒரு கட்சி ஆட்சிமுறையே தற்போதைக்கு மிகவும் சிறப்பாக அமையும். ஆனால் ஜனநாயகமென்பது மிகவும் சிறந்ததொன்று எனவே இப்படியான ஒரு கட்சி ஆட்சிமுறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதே சாலச்சிறந்ததாக இருக்கமுடியும். இவ்வாட்சி முறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்திற்கு தேவையான அடித்தளங்களை இடவேண்டும் அதாவது மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை களைந்து அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி மிகத்தெளிவுள்ளவர்கள் ஆக்கி அதன் பின் ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவர்வேண்டும்.

Saturday, April 18, 2009

வியாழன் மத்தியான சாப்பாடு

இப்பவெல்லாம் எனக்கு எதோ வியாழக்கிழமை வந்தாலே ஒரு ஒரு கரி நாள்மாதிரியப்பா. எல்லாம் இந்த மத்தியான சாப்பாடுதான். இந்த மதிய உணவுதான் உலகத்திலயே மிக மிக கேவலமாக தாயாரிக்கப்பட்ட உணவா இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு இதை சாப்பிடும்போது வந்து போகும். பத்து நாள் சாப்பிடாமல் கிடந்தவனிட்டை கொண்டே குடுத்தால் கூட கெட்டவார்த்தையால திட்டிட்டு தூக்கியெறிவான் என்றுதான் நினைக்கிறன். அப்பிடி கேவலமாயிருக்கும் அது மோந்துபார்க்கிறதுக்கு முன்னமேயென்றால் மோந்து பார்த்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் நான் அந்த சாதனையை செய்திருக்கிறன் அச்சாதனையை இறுதியில் சொல்லுறன் (எப்படித்தான் இப்படியெல்லாம் செய்யிறாங்களோ தெரியாது இதுக்கெல்லாம் தனிப்பிறப்பெடுக்கவேணும்). இதுக்கு முந்தி எங்கட flashback ஐ பார்த்திட்டு இப்ப நடக்கிறதை பார்த்தால் சிரிப்புத்தான் வரும்

முந்தியெல்லாம் பாருங்க நாங்கள் எல்லாம் பெரிய highly people. ஏனெண்டு கேட்கிறிங்களா? உப்பு எப்பன் குறைஞ்சு கூடினாலே எத்தனை பெரிய கலவரம் யுத்தம் என்றெல்லாம் அம்மாவோடு செய்வம். எத்தினை பேச்சு அம்மாவுக்கு இவ்வளவு காலம் சமைக்கிறிங்கள் இன்னும் உப்பு சரியா போடத்தெரியாது (எதோ இவரைவிட்டால் எல்லாம் perfect ஆ செய்வரில்லே) என்று அன்று ஒரு நாள் குறைஞ்சதுக்கு எதோ ஒவ்வொரு நாளும் செய்யிறமாதிரி பேச்சு, அந்த சாப்பாட்டை சாப்பிடமாட்டன் என்று உண்ணவிரதம் வேற இருப்பம் அம்மா இதெல்லாத்தையும் பார்த்துட்டு சரி நான் திருப்பி செய்துதாரன் என்று எழும்பிபோகத்தான் எங்களுக்கு திருப்தி வந்து எதோ எங்கட போராட்டத்தில வெற்றிபெற்றாச்சு என்ற பெருமையில கொலர தூக்கிவிடாத குறையா போய் அம்மாட்டை சரி நான் இதையே சாப்பிடிறன் என்று பெரிய தியாகம் செய்து சாப்பிடுவது போல சாப்பிடுவம் (ஆனால் இப்ப நிலமையை பாருங்க). இப்படி பந்தா பண்ணி சாப்பிட்டனாங்கள் இப்ப இப்பிடி அழுதழுது சாப்பிடவேண்டிக்கிடக்கு. இனி எப்பதான் அந்தகாலம் வருமோ……..வயது திரும்பி மற்றவழத்திற்கு ஓடாதா என்றுகூட சிலவேளைகளில் யோசிப்பதுண்டு.

சரி சாப்பாட்டை சாப்பிட்டகதைக்கு வருவம். எனக்கு முதலிலேயே ஒரு idea சாப்பாட்டை திறந்து பார்க்காமல் வெளில எங்கேயாவது போய் சாப்பிடுவமென்று (தெரியும்தானே 2 வருஷமா வியாழனில் எப்பிடி சாப்பாடென்று). ஆனால் அதுக்கும்போய் எங்கட office ல இருந்த manager ஒருதன் ஆப்பு வைச்சுவிட்டான். என்னென்றால் நானும் வெளில போய் சாப்பிட idea போட்டு, எங்கட office ல இருக்கிறவே சாப்பிட முதலில போகட்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தேன் ஏனென்றால் அவேக்கு முதல் வெளிக்கிட்டனென்றால் தங்களோடுவந்து சாப்பிடுமாறு வற்புறுத்திக்கொண்டிருப்பார்கள். அவங்களோடு போய் சாப்பிடிறதில என்ன பிரச்சனையென்றால் அந்த chinese சாப்பாடுதான் (இதைப்பற்றி பெரிய சரிதம் எழுதலாம்). அதை சாப்பிடுவதை காட்டிலும் பட்டினிகிடக்கலாம். அந்த manager என்ன செய்தானென்றால் போகும்போது என்னையும் சாப்பிட வா என்று ஒரே அடம்பிடிக்க வெளிக்கிட்டுட்டான் நானும் அவனிடமிருந்து தப்புவதற்காக நான் கொண்டந்த சாப்பாட்டை திறந்து சாப்பிடத்தொடங்கிவிட்டேன். இப்பதான் என்ர கஸ்டகாலம் ஆரம்பமாச்சு. என்னவா இருந்தலென்ன மூக்கப்பிடிச்சுக்கொண்டு மருந்துகுடிக்கிற மாதிரி சாப்பிடிறதுதான் என்று சபதமெடுத்து சாப்பிடதொடங்கினேன். சரியென்று ஒரு பிடியை வாய்க்குள் போட்டு மெல்லத்தொடங்கினால், வாய்க்குள் ஒரே கரிக்கட்டிமாதிரி கிடந்துச்சு என்னடா இது என் சபதத்துக்கு ஆப்புவைக்குது என்று கறியை குனிஞ்சுபார்த்தால் அதில ஒரு கறி கரியாகிக்கிடந்திச்சு அது என்ன கறியென்று ஆராய்ந்துபார்த்தில் அது கோபா வறையென்று அந்த சமையல்கார சீமான் செய்திருக்கிறார் என்று விளங்கிச்சு. அப்பதான் காலையில வீடெல்லாம் ஒரே புகை அதாலதான் தான் மூச்சுமுட்டி விழித்துகொண்டதா hall க்க படுக்கிற நண்பனொருவன் சொன்னது ஞாபகத்துகு வந்தது. ஓ……அந்த விளைவுதான் இந்த கரிக்கட்டி கறி என்று விளங்கிச்சு. அப்பதான் யோசிச்சன் அவங்களோடபோயாவது ஏதாவது சீனா சாப்பாடாவது சாப்பிட்டிருக்கலாமென்று என்ன செய்ய எல்லாம் விதியென்று அடுத்த வாய் சோற்றை சாப்பிடத்தொடங்கினேன் ம்ம்ம் முடியல. இதுக்குமேல சாப்பிட்டனென்றால் உலகத்தில ஆக கேவலமான சாப்பாட்டை 2 வாய்க்கு மேல் சாப்பிட்ட கின்னஸ் சாதனை வந்திடுமென்ற பயத்தில சாப்பிடாமல் அப்பிடியே கொண்டுபோய் கொட்டிட்டுவந்து கம் என்று வந்திருந்து இதை எழுதுகிறேன் சாப்பிடபோனாக்கள் திரும்பி office வரும்வரைக்கும். இதுதான் என் சாப்பாட்டுக்கதை………BYE.


Thursday, April 16, 2009

சகோதரியின் கேள்விக்கு எனது பதில்……….

இது உண்மையில் புதுவருடத்தன்று எனது சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால். நான் அவளுக்கு எழுதிய பதில்……...

நீ கேட்ட கேள்விக்கு எனக்கு கனக்க எதோ பதில் அளிக்க வேணும்போல பல எண்ணம் மனதுக்குள் வந்து நிற்கிறது ஆனால் எனக்கு அவ்வளவையும் தொகுக்க முடியல……….இருந்தும் எனது மன எண்ணங்களை முடிந்தளவு எழுத்தாக தர முயற்சி செய்கிறேன்.

நம்மளுடைய சமூகமிருக்கே அது பல சம்பிரதாயங்களை சரியான அர்த்தப்படுத்தி அதை கடைப்பிடிப்பது கிடையாது. ஏனோ இது சம்பிரதாயம் கடவுளுக்கு செய்வது கட்டாயம் செய்யவேண்டும் அல்லது கடைப்பிடிக்கவேண்டுமென்றே செய்வதுண்டு. நாங்கள் எமது சொந்தகாரர் ஒருதன் (அதுவும் ஒருவேளை எத்தனையோ கடல்மைல் தொலைவில் கூட இருக்கலாம்) செத்துவிட்டான் என்றால் அவன் செத்து 31 நாள் எமக்கு துடக்கு என்று சொல்லி கோயில் பக்கம் போகக்கூடாதென்று வலு கட்டுப்பாட்டோடு இருப்போம் அவன் செத்த ஆண்டில் வரும் தைப்பொங்கல் புதுவருடப்பிறப்பு மற்றும் தீபாவளி போன்றவற்றை புறக்கணிப்பதுபோல வெளியில் பானை வைத்து பொங்கமாட்டோம், புத்தாடை அணிந்து கலகலப்பாக திரியமாட்டோம். இதெல்லாம் எதுக்கப்பா என்று கேட்டால் அது சம்பிரதாயம் என்று சொல்வார்கள் அதிலும் கொஞ்சம் பகுத்தறிவுடன் சிலர் நாங்கள் இப்படி திரிஞ்சால் அந்த செத்தவனின் பிள்ளை குட்டியல் என்ன நினைக்கும் என்பார்கள்.

ஆனால் நம்முன்னோர்கள் மிகச்சரியாக இவற்றை வகுத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறன். ஏனெனில் எமது சமூகத்தை நல்ல மனிதமுள்ள மக்களாக வழிப்படுத்தவேண்டுமென்ற நோக்கோடுதான் இதை வகுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டும் அவர்களை வேதனைப்படுத்தக்கூடிய விதத்தில் நாம் நடந்துகொள்ளக்கூடாது என நல்ல விதத்தில் தங்கள் சமூகத்தை வழிப்படுத்தக்கூடியவாறு வகுத்திருகிறார்கள்.

நாங்கள் என்ன செய்கிறோம். சம்பிரதாயத்திற்காக 31 நாள் துடக்கு என்று கணக்காக கடைப்பிடித்துவிட்டு அடுத்த நாள் எமது களியாட்டங்களை தொடங்குகிறோம். அந்த செத்தவனுடைய நெருங்கியோரின் துக்கம் சிலவேளை 35 நாளிற்கு பிறகு குறையலாம் அல்லது அதற்கு முன்னமே 25 நாளிலும் குறையலாம். ஆனால் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை கணக்கா துடக்க முடிப்போம். இதுதான் எமது சமூகத்தின் இன்றைய வழமை. இதனால்தான் என்னவோ இதன் உண்மையான அர்த்தத்தை சிந்திக்காமலே பழகிவிட்டோம்.

இதே பழக்கம்தான் இங்கும் நடக்கிறது. அதுதான் வன்னியில் இன்று எம் உறவுகள் பெரும் துன்பத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களையும் அந்த மக்கள் அனுபவிக்கும்போது நாம் புதுவருடத்தை புத்தாடை அணிந்து கலகலப்பாக கொண்டாடத்தான் வேணுமா என்று கேட்டால் எமது சமூகத்தில் ஒரு சாரார் சொல்கிறார்கள் அது வன்னியில் நடக்கிறது இங்கு நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினால் யாருக்குதான் தெரியப்போகுதென்றும் மேலும் நாம் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கவேண்டும் இழந்த காலம் திரும்பிவராது என்ற விளக்கம் வேற தருகிறார்கள். ஆனால் இதே சாரார் தான் எத்தனையோ கடல்மைல் தொலைவில் இயற்கையாக வயதாகி மரணித்த தனது சொந்தகாரன் ஒருவனுக்காக 31 நாள் சம்பிரதாயமாக துடக்கு கடைப்பிடிகிறார்கள். இப்படி இவர்கள் கடைப்பிடிக்கும்போது ஏன் இவர்கள் தங்கள் சந்தோஷமான காலம் கடந்துபோவதாக கருதுவதில்லை. ஆனால் எமக்காக தங்கள் சந்தோஷங்கள் அனைத்தையும் இழந்து போராடி மடிகின்ற அந்த போராளிகளுக்காக இவர்களால் புத்தாடை அணிவதை தவிர்த்து ஒரு சிறிய சந்தோஷத்தை இழக்க முடியாமல் இருக்கிறது. அந்த போராளிகளின் பெற்றோரின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாமல் உள்ளது. அல்லது அங்கிருக்கும் விடுதலைக்காக பாடுபட்ட அம்மக்களின் துக்கத்தை பகிரமுடியாமலுள்ளது. இதிலென்ன நியாயம் இருக்கிறது?

இப்படியெல்லாம் கேட்க போக இச்சாரார் வழமையான கேள்வியே கேட்டு தாங்கள் செய்வதை நியாயப்படுத்திற மாதிரி கதைப்பார்கள். அதுதான் நாங்கள் அங்கே போய் அந்த மக்களுடன் இருக்கலாம் அல்லது போராடி இருக்கலாம் அதைவிட்டுட்டு இஞ்சவந்து தமக்கு புத்தி சொல்கிறோம் என்பார்கள். தாங்கள் ஒரே முடிவில்தான் இருக்கிறோம் அங்குபோய் போராடவில்லை தமக்கு உந்த அரசியல் எல்லாம் பிடிக்காது தாம் எப்பவும் நடுனிலையானவர்கள் யாருக்கும் ஆதரவில்லை தாங்கள் யாருக்கும் தொந்தரவில்லாமல் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்கிறோம் என்று பலவாறு நியாயம் கற்பிப்பார்கள். ஆனால் இச்சாரார் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்ல காரணமானவர்களை வசதியாக மறந்துவிட்டிருப்பார்கள். இவர்களைப்போலத்தான் 83ம் ஆண்டு பலர் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசென்றிருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது.

இப்புத்தாண்டு எம் தமிழினத்திற்கு ஒரு விடிவு காலத்தை வெற்றியை தேடித்தரும் ஆண்டாக அமையவேண்டுமென வேண்டுகிறேன்.

Monday, April 13, 2009

எமக்கு தேவையில்லை தற்காலிக போர்நிறுத்தம்

இன்றும் வழமையைப்போலவே பிரார்தனையுடன் எழும்பினேன். போராளிகளிற்கு வெற்றிவர வேண்டும் நல்ல செய்தி ஏதாவது வரவேண்டும் எதுவும் துக்கம் தரும் செய்திவந்திடக்கூடாது என்ற பிரார்தனை. பெரும்பாலான தமிழரின் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இறைவன் தான் இன்னமும் தூங்கிக்கொண்டே இருக்கிறான். என்று விழிப்பான் இதுதான் எமது ஏக்கம். இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை. சற்று தாமதித்தாலும் தர்மம் வெல்லும் உண்மை என்றும் தோற்றதில்லை.

இதற்கிடையே மகிந்தவின் 48 மணிநேர போர்நிறுத்த அறிவிப்பு பெரும் விசனத்தை கொண்டுவருகிறது. போர்நிறுத்தத்தால் இல்லை அது அறிவிப்பு செய்ததற்கு கூறப்பட்ட காரணம் அதற்கு பின்னால் உள்ள சதித்திட்டம் இவற்றால்தான் வெறுப்பாகவே இருக்கு. போர்நிறுத்தமென்பது ஒரு நல்ல விஷயமே 1 மணிநேர போர்நிறுத்தம் கூட அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலே ஏனெனில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக நடக்கும் போரில் 1 நிமிடம்கூட ஓய்வு கொடுக்கவில்லை. அப்படிப்பார்க்கையில் இது ஒரு ஆறுதலே. ஆனால் இந்த 48 மணிநேரம் செய்து என்ன பிரயோசனமென்றால் ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த 48 மணிநேரத்தில் அம்மக்கள் என்ன செய்யமுடியும். தம்முறவுகள் யார் யார் மடிந்தார்கள் யார் உயிருடன் உள்ளார்கள் என்று கண்க்கு பார்க்கவே முடியும். தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கத்தான் முடியுமா அப்பிடி வாங்குவதற்கு பொருட்கள்தான் உள்ளனவா? அல்லது வாங்கினால்தான் அதை வைப்பதற்கு வீடிருக்கிறதா? அப்பிடி வாங்குவதற்கு பணம்தான் உள்ளதா? சரி உயிரையாவது காப்பதற்கு பாதுகாப்பான இடமென்று எங்கு செல்வது அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திலிருந்து. அல்லது அரசின் நலன்புரிமுகாமென அழைக்கப்படும் வதைமுகாமுக்கு செல்வதா? அப்பிடி அங்குதான் போவதென்றால் என்றோ அந்த மக்கள் போயிருப்பார்களே.

இப்படி அந்த மக்கள் அல்லற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அந்த கொடும் பயங்கரவாதி மகிந்த சொல்லுகிறான் அந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 48 மணிநேர போர்நிறுத்தம் செய்கிறாரம். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள் அவனுக்கு. இதிலிருந்தே தெரிகிறது அவனுக்குள் எவ்வளவு வக்கிரமும் இனவாதமும் கொட்டிக்கிடக்கென்று.

இந்த போர்நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்களை ஊகிக்கும்போது பயங்கரமாக உள்ளது. ஒருவேளை இந்த போர்நிறுத்த நாடகம் முடிந்த பிறகு வெளியேறாத மக்கள் எல்லோரும் புலிகளாக மாறிவிட்டார்களென்று அறிவித்துவிட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து அழிக்க நினைப்பார்களோ என எண்ணும்போது என்னவோ செய்கிறது (கடவுளே அப்படியேதேனும் நடந்துவிடக்கூடாது) அதற்குள் இந்த உலகம் கண்ணைத்திறக்கவேண்டும். அது புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது அதற்காக நாம் எல்லோரும் வீச்சோடு படுவேகமாக எம்முள் உள்ள வேற்றுமைகளை மறந்து இப்போ உள்ளதைவிட கடுமையாக போராடவேண்டும். மனம் தளராது சோர்வடைய விடாமல் எம்போராட்டத்தை தொடரவேண்டும். இந்த போர்நிறுத்தத்தை காரணம்காட்டியே பல நாடுகள் நம் போராட்டத்தை தட்டிக்கழிக்கக்கூடும் நசுக்கக்கூட முற்படும் எதற்கும் அசைந்து கொடுக்காது வலிமையாக நின்று அவர்களின் மனச்சாட்சியை தொடவேண்டும். இதைவிட்டால் எமக்கு வேறு சந்தர்ப்பமில்லை எமது நிம்மதியான வாழ்விற்கு ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக உரத்து குரல் கொடுப்போம்

"எமக்கு தேவையில்லை தற்காலிக போர்நிறுத்தம் எமக்கு வேண்டும் நிரந்தர போர்நிறுத்தம்"
"எமக்கு தேவை நிரந்தர தீர்வு நிரந்தர நிம்மதி அது தமிழீழமே"
"எமது ஏக பிரநிதிகள் விடுதலைப்புலிகளே எமது தலைவர் பிரபாகரனே"

Thursday, April 9, 2009

இந்திய அரசே உனக்கு நாம் என்ன செய்தோம்?

நச்சுக்குண்டேவி எம்மினத்தை கொல்லுமளவுக்கு உனக்கு எம்மினம் என்ன கொடுமை செய்துவிட்டது? இப்படிக்கேட்டால் உடனே சொல்லுகிறாய் உனது பிரதமரைக்கொன்ற இனமென்று. உனக்கு கூட சரியாக உறுதியாக தெரியாதே அதை செய்தது யாரென்று……அப்படியிருக்க நீ ஒரு இனத்தை அழிக்க துணிந்துவிட்டாயே. காலப்போக்கில அதை செய்தது வேறொருவரென தெரியவந்தால் எப்படி அந்நிலையில் நியாயம் வழங்கப்போறாய். சரி நீ சொல்வது போல் அது யாரோவொரு ஈழத்தமிழனால் செய்யப்பட்டால் அதற்கு முழு இனத்தையும் பழிவாங்கிறாயே இதுவென்ன நியாயம். அதுவும் இலங்கை அரசால் ஏற்கனவே கொல்ல முயற்சிக்கப்பட்ட ஒருவரே பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார். அவ்விலங்கை அரசுடன் மட்டும் கூடிக்குலாவி தமிழினத்தை நச்சுக்குண்டேவி கொல்கிறாயே அவ்வளவு கேவலமானவனா தமிழன்.

உனக்கு ஒன்றுதெரியுமா? ஒவ்வொரு சிங்களவன் மனதில் நீ இருக்கிறாயா என்று ஆராய்ந்து பார்த்ததுண்டா? நீ எங்க அதுகளை ஆராய போகிறாய் உன் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான நீயும் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான அவனும்தானே கதைத்து முடிவெடுக்கிறாய். பிறகு எப்படி கீழ் மட்ட மக்களின் மனம் உனக்கு புரியும். ஆனால் எங்களுக்கு தெரியும் ஏனெனறால் நாங்க அவன்கூட இருந்துருக்கிறோம். அடிப்படையில் நீ அவன் மனதில் இல்லை எப்படியென்று கேட்கிறியா? இதற்கு ஒரு சின்ன உதாரணமே போதும்.

ஒரு கிரிக்கட் போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ. இதில தமிழர்கள் சிங்களவர்கூட ஒன்றாய் இருந்து பார்க்கிறார்கள். அதில இந்தியா வெற்றிகளை குவிக்கும்போது தமிழருக்கு எதோவொரு உணர்வு அதற்காக கையை தட்டுகிறான். ஆனால் அந்த சிங்களவன் என்ன செய்கிறான் கை தட்டியதற்காக அவனை தாக்குகிறான். இது உண்மையில் நடக்கின்ற ஒன்று. நான் அனுபவதிலும் கண்டதுண்டு. ஆனால் இன்று என்ன அதே சிங்களவன் உன்னுடைய உதவியுடன் உனக்காக தாக்குப்பட்ட தமிழனை அழிக்கிறான்.

இது ஒரு சின்ன உதாரணம்தான், வாழ்க்கையில் நடக்கும் பல பல சம்பவங்களை பார்க்கும்போது ஒரு தமிழனின் அடிப்படை மனதும் ஒரு சிங்களவனின் அடிப்படை மனதும் தெரியும். ஏன் என்று கேட்டால் தெரியாது. இந்தியா தமிழனுக்காக என்ன செய்துவிட்டான் அதுவும் ஒன்றுமில்லை ஆனாலு தமிழன் உன்னை நேசிக்கிறான் உன்னை பின்பற்றுகிறான் ஆனால் நீயோ அவனை நச்சுக்குண்டேவிக் கொல்கிறாய்.

ஏன் நான் எனது மனநிலையையே சொல்லுகிறேன். இதுதான் பெரும்பாலான தமிழரின் மனநிலையாகவுமிருக்கும். கார்கில் யுத்தம் வந்தபோது பாகிஸ்தான் மீது ஆத்திரம் இந்தியா வெல்லவேண்டும் என்ற பிரார்த்தனை. குஜராத் பூகம்பம் வந்த போது ஏதோ எங்கள் நாட்டு மக்களுக்கு வந்தமாதிரி உணர்வு துக்கம். தூரதர்ஷன் நிகழ்ச்சி பார்க்கும்போது ஏதோ எம் தேசிய தொலைக்காட்சி பார்ப்பது போலவே ஒரு உணர்வு. இந்திய தேசிய நாளில் ஒரு உத்வேகம் தேசிய கீதத்தைக்கேட்கும்போது ஒரு இனம்புரியா உணர்வு கொடியேற்றும்போது ஒரு மரியாதை இத்தனைக்கும் இலங்கையின் தேசிய நாளையோ, கீதத்தையோ அல்லது கொடியையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. இத்தனை உணர்வும் எதனால் வந்ததென்று எனக்கே தெரியவில்லை. நீ எமக்காக என்ன செய்தாய்? இப்படி உன் மீது பாசம் வைத்த தமிழரை நச்சுக்குண்டேவி அழிக்கிறாய்.

ஏன் இந்த வெறி? உன் வல்லாதிக்க ஆசைக்கு வெறிக்கு தமிழன்தான் கிடைத்தானா உனக்கு? தமிழனை கொன்றால் கேட்க எவனிமில்லை என்ற துணிச்சலில் அவனுடை மன உணர்வை பார்க்க மறந்திட்டாய். உன் ஆதிக்க வெறி உன் கண்ணை மறைத்துவிட்டது. இந்திய வல்லாதிக்கமே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் அப்பவிருந்த உணர்வு இப்ப எம்மனதில் இல்லை உன்னை ஒரு துரோகியாகவே எண்ணத்தோன்றுகிறது. இதற்காக நீ நிச்சயம் வருந்துவாய் ஒருநாள். இந்த உலகத்தில் உனக்கொரு உற்ற நண்பனின்றி வருந்துவாய்.

Tuesday, April 7, 2009

பொறுக்க முடியவில்லை……………….

இன்று எதையோ இழந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு………..ஒரே சோகமான நிலை……….. எதற்கென்றால் எல்லாமே நேற்றைய ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தியின் விளைவே. அதுதான் நச்சுக்குண்டு ஏவி 250க்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவாம்……….ஏன் நியாயம் செத்துவிட்டதா இந்த உலகத்தில்…..அல்லது இதுவரைக்கும் அப்படியென்று ஒன்று இருந்ததே இல்லையா……….உண்மை வெல்லும் சத்தியம் ஜெயிக்கும் தர்மம்தான் இறுதியில் வெல்லுமென்பதெல்லாம் சும்மா பசப்பு வார்த்தைகளா? …………ஆனால் நாங்கள் இன்று இறுதி நிலையிலையே நிற்கிறோம் இன்னமும் தர்மம் வெல்லுமென்ற நம்பிக்கையுடன்……………..

இதற்கிடையில் என் நண்பர்களிருவரின் சம்பாஷனைகளால் மனம் இன்னும் வேதனைப்படுகிறது. என்ன அதுவென்றால்………….

நேற்று அந்த செய்திவந்ததிலிருந்து (உண்மையில் இச்செய்தி முந்தநாளே வந்துவிட்டது நான் நம்பவில்லை) தமிழனென்று மானமுள்ளவன் எவனுமே சோகநிலையில்தான் இருப்பான். விடிய எழும்பிய பின்னும் அந்த சோகம் மாறவில்லை, அந்நிலையில் இவர்கள் இருவரும் யாழ் செல்வதுபற்றி கதைத்து விட்டு எப்பொழுது அங்கு யாழ்தேவி(Train) விடுவார்கள் என்று அலசி ஆராய்கிறார்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி சுறனையற்ற மனிதர்கள் என்ன பிறப்புகளோ தெரியவில்லை. இதுக்குள்ள வேற என்னையும் இணைக்க எப்ப ஓடுமென்று கேள்வி நான் ஒன்றுமே பேசவில்லை. மவுனமாகவே இருந்துவிட்டேன் ஏனென்றால் இவர்களோடு கதைக்கபோனால் எனக்குதான் வேதனைகூடுமென்று முதல் நடந்த சம்பவமொன்று ஞாபமூட்டியது.

இதையே இவர்கள் வேறயொருநேரத்தில் கதைத்திருந்தால் நான் பெரிதாக எடுத்திருக்கமாட்டேன் இவையள் இப்பிடித்தான் என்று பேசமால் போய்கிட்டிருந்திருப்பேன் ஆனால் அவேக்கு இதுதானா நேரம் கிடைத்தது ஆராய்ச்சிக்கு………..பொறுக்க முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஒருவருக்கு நேற்று நடந்த சம்பவம் தெரிந்திருக்குமோ என்பதைக்கூட உறுதியா சொல்லமுடியாது. மற்றவருக்கு எல்லா விஷயும் தெரியும். ஏன் இவர்களுக்கு உணர்வென்பதே இல்லையா? இவர்களேன் இப்படி இருக்கிறார்கள் என பலதடவை என்னை நானே கேட்பதுண்டு. இதைப்பற்றி பார்க்க முன்னாடி முதல் நடந்த சம்பவத்தையும் பார்த்துவிட்டு வருவோம்

நாங்கள் வழமையாக வேலைக்கு புறப்பட முன் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு TV news பார்த்து அதைப்பற்றி விமர்சித்துவிட்டுதான் செல்வது. இப்படித்தான் ஒருநாள் news பார்த்துகொண்டிருக்க காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக ஒரு செய்தி. நானும் அந்த செய்தியைபார்த்தவுடன் எனது விமர்சனம் இதெங்க மக்களுக்கு எல்லாம் இராணுவத்துக்குத்தான் என்றேன். உடனே எனது அதே நண்பர்களில் விபரமான நண்பர்

"நீங்க எதை செய்தாலும் இப்படி சொல்லிக்கொண்டிருங்கோ"
நான் "உண்மையில் உதவி தேவைப்படுவது வன்னிக்குள் உள்ளவர்களுக்கே, வெளியில் உள்ளவர்களுக்கு இவ்வளவு செலவு செய்கிற இலங்கை அரசுக்கு வசதியில்லையா?"
உடனே அந்த விபரமற்ற மற்ற நண்பர் " வவுனியா ஆஸ்பத்திரியில் பனடோல் இல்லையாம்" என்றார்

எனக்கு சிரிப்பதோ அழுவதோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவருக்கு அவற்றை பிறந்த கிராமம் மற்றும் வவுனியா கொழும்பு இதைத்தவிர பிற இடம் எங்கு வரைபடத்தில் இருக்கென்றுகூட தெரியாது. தமிழர் போராட்டம் எதற்காக என்றுகூட தெரியாது. ஆனால் இத்தனைக்கும் இவர் நாட்டைவிட்டு வெளியில்வந்து ஒரு வருடம்கூட இல்லை. எங்கதான் இருந்தாரோ தெரியாது. இவருக்கு நடந்ததென்னவென்றால் இவருடைய உறவினர் சிலர் அங்கு வவுனியாவில் இருக்கிறார்கள் போல அவே அங்கு எங்கோ சென்ற போதே அல்லது ரோட்டில கதைச்சதை இந்த புண்ணியவானிடம் சொல்லியிருக்கிறார்கள் அதை இவர் எங்க கொண்டுவந்து பாவிச்சார் என்று பாருங்கள். சரி அவரைப்பற்றிக்கதைப்பதில் பிரயோசனமில்லை. விடுவம்

அவற்றை பதிலுக்கு நான் "சரி அரசால்தான் முடியவில்லையென்றால் வேற எத்தனை நிறுவனமிருக்கு உதவ" என்றேன்

உடனே அந்த விபரமானவர் "அப்பிடியென்றால் அந்த சனத்தை விடவேண்டியது தானே" என்றார்

எனக்கு பத்திக்கொண்டுவந்தது. அதில் மேலதிகமாக அவருடன் கதைவளர்க்க விரும்பவில்லை வீணா கதைப்பதால் பிரயோசனமில்லை என்பதால்.

இவரென்ன விளங்காத மாதிரி உள்ளரோ இல்லை தான் சொல்லும்கருத்துதான் சரியென்று சொல்வதற்காக சொல்கிறாரோ என்று விளங்கவில்லை. அவருடைய விபரமறியும் திறனைப்பார்த்தால் விளங்காமலிருக்க வாய்ப்பில்லை.

அரசு சொல்வதை நம்புகின்ற அளவுக்கு 1% கூட தமிழ் ஊடகங்கள் சொல்வதை நம்புகிறார்களில்லையே. ஒரு வெளிநாட்டவன் என்றால் கூட பரவாயில்லை அந்த மக்களுடன் வாழ்ந்த ஒருவன் எப்படி நம்பமறுக்கிறான். அந்த மக்களில் எத்தனை பேர் வெளியில் வர விரும்பாமல் இருக்கிறார்கள் என்று இவர்கள் என்ன அறியாதத எத்தனை பேர் விடுதலைக்காக உழைத்தவர்கள் உள்ளார்கள் இந்த மக்களுக்கு என்ன பதில் இவர் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் பதிலில்லை சும்மா எழுந்தமானத்துக்கு கதைக்கிறார்கள். என்ன இந்த மக்கள் பாவம் செய்தவர்கள் என்று இவர்கள் கருதுகிறார்களா? அல்லது போராளிகளின் தாய் தந்தை குடும்பம் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறார்களா? என்னதான் கருதுகிறார்கள் அதுக்குகூட இவர்களிடம் விளக்கமில்லை. இந்த நண்பரைப்போல பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள் எம் சகோதரராக நண்பராக உறவினராக தயவுசெய்து மாற்றுங்கள் உங்களை………உங்கள் மனச்சாட்சியை தொட்டு ஒருமுறை யோசியிங்கள்.

இப்படியானவர்கள உடனே கேட்பார்கள் எங்களை பார்த்து "நீ இவ்வளவு கதைக்கிறியே போய் போராடவேண்டியதுதானே" என்று. உண்மைதான் நாங்கள் போரடவில்லைதான் இந்த விடுதலைக்காக risk எடுத்து எதுவும் செய்துவிடவில்லைதான் உண்மையை சொல்லப்போனால் எமக்கும் மனம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிற்து எதுவுமே செய்யவில்லையே என்று ஆனாலு வாழும் ஆசையை விடமுடியவில்லையே…..அம்மா அப்பா சகோதரரை பிரியமுடியவில்லையே……..இதுவே எனக்குள் பலவாறான போரட்டங்களை நடத்துவதுண்டு…….நான் செய்வது பிழையென்றுகூட தெரிகிறது. இருந்தும் அந்த பிழையை விடுகிறேன். அதற்காக நான் செய்யும்பிழையை சரிப்படுத்த மனச்சாட்சிப்படிதான் நடந்துகொள்கிறேன் என பொய்மையாய் எனக்குள் திருப்தியை ஏற்படுத்துவதற்காக போராடுகின்ற உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதா? எம்மால் முடியாது என்பதை அவர்கள் செய்யும்போது உண்மையில் அவர்களின் தியாகத்தின் அதிஉன்னதம் உங்களுக்கு புரியவில்லையா? மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் அவர்கள் எத்தனை மகத்தான மனிதர்கள் என்று. அவர்களென்ன தன் குடும்பம் வாழவேண்டுமென்று மட்டுமா போராடுகிறார்கள். ஒரு முறையே வாழக்கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை எதற்காக தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள்? அவர்களுக்கு உங்களைப்போல அல்லது எங்களைப்போல வாழ ஆசையில்லையா? உயிரோடிருக்க விருப்பமில்லையா? ஒரு முறை சிந்தித்துபார்த்தீர்கள் என்றால் புரியும். தயவுசெய்து அவர்களின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங்கள்.

எனது இந்த இரு நண்பர்களின் வடிவில் ஒரு மக்கள் சமூகத்தைதான் பார்க்கிறேன். தயவுசெய்து இப்படி இருக்காதீர்கள் மாறுங்கள்………..

Wednesday, February 25, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா


இது யாரல் எழுதப்பட்டதென்பது தெரியவில்லை. நண்பனொருவர் எனது mail க்கு அனுப்பியிருந்தார் அதனை இங்கிணைத்துள்ளேன்

Tuesday, January 27, 2009

உலகமே பார் எமது உறவுகள் படும்பாட்டை........உனது ஆயுதம் செய்யும்சேவையை பார்.....